மேலும்...
Rahmath online bookstore www.rahmathbooks.com
திருக்குர்ஆனுக்கு அடுத்த ஆதாரபூர்வமான நூல் என உலக முஸ்லிம்களால் மதிக்கப்படும் பிரபல நபிமொழித் தொகுப்பே ஸஹீஹூல் பபுகாரீ ஆகும். அல்ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் மின் சுனனி ரசூல்லாஹி (ஸல்) வ அய்யாமிஹீ என்பது இந்த நூலுக்கு நூலாசிரியர் சூட்டிய முழுப் பெயராகும். (பொருள் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடர் முறிவவுறாத நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்பபுகள் மட்டுமே இடம்பெற்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைக் குறிப்பபு குணநலன்கள் அனைத்தும் உட்பொதிவாய் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையயும் உள்ளடக்கிய தொகுப்பபு.) இன்றைய ர`யக் குடியரசுகளில் ஒன்றான உஸ்பிகிஸ்தானில் ஹிஜ்ரி 194ஆம் ஆண்டில் (கி.பி.810) பிறந்த இமாம் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்றாஹீம் பின் முஃகீரா அல்பபுகாரீ (ரஹ்) அவர்கள் இந்த அரிய தொகுப்பினை 16 ஆண்டுகாலக் கடின உழைப்பால் தொகுத்தார்கள். அன்னார் இந்த நூலைத் தொகுக்கும் சிரமமான பணியில் இடுபட்டிருந்தபோது ஏறத்தாழ 6லட்சம் ஹதீஸ்கள் அவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் இந்நூல் ஒரு ஹதீஸை இடம்பெறச் செய்வதற்கு அவர்கள் விதித்துக்கொண்ட கடுமையான நிபந்தனைகளின் காரணத்தால் ஆறு லட்சத்திருந்து 7563 ஹதீஸ்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இதில் இடம்பெறச் செய்துள்ளார்கள். அவற்றிலும் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்களை நீக்கிப் பார்த்தால் 4000 நபிமொழிகளே மிங்சும். ஹதீஸ்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் வகித்துக்கொண்ட கடும் நிபந்தனைகளே இந்தத் தொகுப்பிற்கு உன்னதமான இடத்தைத் தேடித் தந்தன எனலாம். கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஹதீஸ்களை மட்டுமே இந்த அரிய தொகுப்பில் நூலாசிரியர் இடம்பெறச் செய்துள்ளார். 1. ஒரு நபிமொழியை நபித்தோழரிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் நம்பத் தகுந்தவர் என்பதில் ஒருமித்தக் கருத்து இருந்தால் மட்டுமே அந்த நபிமொழியை ஆசிரியர் ஏற்பார். ஆகவே நபிமொழியின் அறிவிப்பாளர் தொடர் இறுதிவரை முறிவுறாமல் செல்ல வேண்டும். நபித்தோழரிடமிருந்து அறிவிப்பவர் இரண்டு பேராகவோ அதற்கு அதிகமானாரோகவோ இருந்தால் நல்லது. ஒருவராக இருந்து அவரது அறிவிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும் போதும். 2. அறிவிப்பாளர்களில் ஒருவர் இருட்டடிப்பு செய்பவராக (முதல்லிஸ்) இருந்தால் அந்த ஹதீஸ் இங்கே இடம்பெறாது. அவர் தாம் செய்த இடைச்செருகலைத் தாமே விவரித்திருந்தால் தவிர. 3. ஓர் அறிவிப்பாளர் தமக்கு முந்தைய அறிவிப்பாளரிடம் ஹதீஸை செவிமடுத்ததாகத் தெளிவுபடுத்தியுள்ளாரா என்பதை நூலாசிரியர் கவனிக்கத் தவறவில்லை. அதிலும் இடைச்செருகல் இருக்குமோ என்ற ஐயம் ஏற்படும் இடங்களில் அறிவிப்பாளர்தொடர் இறுதிவரை செல்கிறதா என்பதையும் விவரிக்கத் தவறவில்லை. 4. அறிவிப்பாளர்களில் ஒருவர் ஏதேனும் குற்றச்சாட்டிற்கு இலக்காயிருந்தால் அவர் இடம்பெற்றுள்ள ஹதீஸ் இந்நூலில் இடம்பெறாது. 5. வித்தியாசமான கொள்கை கொண்ட ஒருவர் (முப்ததிஉ) அறிவித்துள்ள ஹதீஸ் இடம்பெற வேண்டுமானால் அவர் உண்மை பேசுபவராகவும் மார்க்கப்பற்றுள்ளவராகவவும் இருத்தல் வேண்டும். 6. அறிவிப்பாளர்கள் நினைவாற்றல் மிக்கவர்களாகவவும் உறுதியானவர்களாகவவும் இருத்தல் வேண்டும். ஓர் அறிவிப்பாளரிடம் நினைவாற்றல் குறைபாடு இருந்து அவரைப் போன்ற மற்றொருவரும் அறிவித்திருந்தால் இருவர் அறிவித்த ஹதீஸ் என்ற பலத்தைக் கொண்டு ஹதீஸ் எடுத்துக்கொள்ளப்படும். 7. ஒரு ஹதீஸ் குறித்து கருத்துவேறுபாடு இருப்பதனால் மட்டும் அந்த ஹதீஸை இமாம் பபுகாரீ (ரஹ்) அவர்கள் தள்ளுபடி செய்துவிடுவதில்லை. மற்ற சான்றுகளையயும் வலுவான சாத்தியகூறுகளையும் வைத்தே முடிவு செய்வார்கள். இன்னும் இவைபோன்ற நிபந்தனைகளைத் தமக்குத்தாமே விதித்துக்கொண்டு தமக்குக் கிடைத்த ஹதீஸ்களை ஆய்வு செய்து தரமான நம்பத் தகுந்தவற்றை மட்டுமே இத்தொகுப்பில் நூலாசிரியர் இடம்பெறச் செய்துள்ளார்கள். இதனாலேயே இதரத்தொகுப்புகளுக்குக் கிடைக்காத முதன்மையும் சிறப்பும் ஸஹீஹூல் புகாரிக்குக் கிடைத்துள்ளது. இதர நபிமொழி தொகுப்பாசிரியர்கள் அனைவருமே ஸஹீஹூல் புகாரியின் உன்னத இடத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு ஹதீஸின் பொருளில் பல தகவல் துணுக்குகள் இருக்கலாம். அதைக் கருத்தில் கொண்டு ஒரே ஹதீஸைப் பல தலைப்புகளின்கீழ் இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இடம்பெறச் செய்துள்ளார்கள். அந்தப் பல கருத்துகளுக்கும் விதிமுறைகளுக்கும் அந்த ஒரு ஹதீஸே ஆதாரமாக விளங்கும். இந்த அடிப்படையில்தான் ஒரே ஹதீஸ் திரும்பத் திரும்ப பல இடங்களில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிறது. இருந்தாலும் அந்த ஹதீஸின் சொல்லாக்கத்திலும் அறிவிப்பாளர்தொடர்களிலும் வித்தியாசம் இருப்பதைப் பெரும்பாலும் காணலாம்.. இறைநம்பிக்கை வணக்க வழிபாடுகள் மனித உறவுகள் தனிமனித வாழ்க்கை குடும்ப வாழ்க்கை பொதுவாழ்க்கை நீதிநிர்வாகம் ஆட்சியதிகாரம் வரலாற்றுக் குறிப்புகள் மரணம் மறுமை எனப் பல்துறைத் தலைப்பபுகளில் 97 அத்தியாயங்களும் ஒவ்வோர் அத்தியாயங்களின்கீழ் பல பாடங்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இறைச் செய்தி (வஹீ)யில் தொடங்கி ஓரிறைக் கோட்பாட்டில் (தவ்ஹீத்) அத்தியாயங்கள் நிறைவுறுகின்றன. மொத்தம் 7563 ஹதீஸ்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இம்மை மறுமை இரண்டிலும் மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வழிகாட்டல்களும் இதில் நிறையவே உள்ளன. இதை வாசிக்கவும் வாசித்தபடி வாழவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இறைவன் வழங்கிய இறைநெறிகளையும் இறைத்தூதர் காட்டிய நேர்மையான வாழ்க்கை முறைகளையும் அறிந்து செயல்படத் தவறியதாலேயே இன்றைய மனிதகுலம் துயரங்களைச் சந்தித்துவருகின்றன. அமைதியான வாழ்க்கை மன அமைதி நேரிய சிந்தனை அப்பழுக்கற்ற தொண்டு ஆகிய சாந்தியே உருவான சமுதாயம் உருவாக வேண்டுமானால் இத்தகைய வழிகாட்டல் உலகெங்கும் பின்பற்றப்பட வேண்டும். அத்தகைய சமுதாயத்தை உருவாக்கும் ஒரு சின்ன முயற்சியே இந்த இணையதளம். அன்புடன்பேராசிரியர் அ. முஹம்மது கான் பாகவி(மொழிபெயர்ப்பாளர் குழு தலைவர் ரஹ்மத் பப்ளிகே`ன்ஸ்)25.08.2002
sdf
செய்திகள்
Copyright © reserved by: RAHMATH TRUST | Email : buhari@rahmath.net | Disclaimer Click here to Download Tamil Fonts RealOne Player