மேலும்...
Rahmath online bookstore www.rahmathbooks.com
இல்முல் குர்ஆன் (குர்ஆனின் கலை) இஸ்லாமிய அறிவவுகளனைத்திற்கும் இதயமாக இருந்து வருகிறது. இல்முல்ஹதீஸ் (ஹதீஸ் கலை) இராஜ நரம்பு போன்றமைந்து அவ்வறிவுகளின் அனைத்து அங்கங்கட்கும் இரத்தத்தைச்சேர்த்து வைத்து ஒவ்வொரு விநாடியும் அவை நல்ல வவுடனும் பொலிவுடனும் இருந்துவரக் காரணமாக அமைந்து நிற்கிறது.ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் குர்ஆனின் இறைவேத முதன்மையான விளக்கமாகவும் இறைவன் நாடியுள்ள கருத்துக்களை மிகத் தெளிவாக எடுத்தியம்பும் விரிந்த விரிவுரையாகவும் திகழ்கிறது.இஸ்லாமியர்களின் நிரந்தர நேர்வழிக்காக இறுதிநாள் வரை அணையாத இரு ஒளி விளக்குகளை இறைவன் ரூடவ்ந்துள்ளான் ஒன்று பரிசுத்த திருக்குர்ஆன். இரண்டு நபியவர்களின் ஜீவியம். இக்கருத்தை கீழ்வரும் இறைவசனம் எடுத்தியம்புகிறது. அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் மத்தியில் இருந்து கொண்டு அவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்துக் கொண்டுமிருக்க நீங்கள் எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? (3101) இவ்வசனத்திற்கேற்ப நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லை. இறைவன் கூறுகிறான் (நபியே!) உங்கட்கு முன் எம்மனிதருக்கும் நிரந்தரத்தை (இவ்வுலகில்) நாம் ஏற்படுத்தவில்லை (2134) ஆகவே நபிகள் கோமான் (ஸல்) நமக்கிடைய இல்லாவிடினும் உண்மையில் அவர்கள் எப்போதும் வரவே செய்கிறார்கள்.காரணம் நபி (ஸல்) அவர்களின் ஜீவிய வாழ்க்கையின் அனைத்துத் துறைகளும் பதிவு செய்யப்பட்டு நிரந்தர ஜீவியம் பெற்றுள்ள நிலையில் காக்கப்பட்டுள்ளன. ஆன்மீகப் பார்வையுள்ள அறிர்கள் ஹதீஸ் தொகுப்பு நூல்களின் பக்கங்களைப் புரட்டும் தருணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பது போன்றும் எழுவது போன்றும் நடப்பது போன்றும் பேசுவது போன்றுமே அன்னாரைக் காண்பர். இதனால்தான் ஹதீஸ் தொகுப்பு நூல் உள்ள வீட்டில் நபி (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பெரியார்கள் கூறியுள்ளனர். ஹதீஸ் தொகுப்புகளில் அஸ்ஸிஹாஹூஸ்ஸித்தா எனும் ஆறு நூல்கள் பிரபலமாக உள்ளன. அவற்றின் கிரீடமாக ஸஹீஹூல் புகாரீ எனும் தொகுப்பு அமைந்துள்ளது. அவற்றுள் மூன்றாகிய (1) ஸஹீஹூல் புகாரீ (2) ஸஹீஹ் முஸ்ம் (3) திர்மிதீ ஆகியவை. (அ) (அல்அகாயித்) இஸ்லாமியக் கொள்கைகள் (ஆ) (அல்இபாதத்) வணக்கங்கள் (இ) (அல்அஹ்லாக்) குண ஒழுக்கங்கள் (ரூடவ்) (அல்முஆமலாத்) கொடுக்கல் வாங்கள் அதாவது வணிகவியல் குடும்பவியல் போன்ற அனைத்துத் துறை சம்பந்தமான ஹதீஸ்களை உள்ளடக்கி இருப்பதால் இம்மூன்றும் ஜாமிஉ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எசியுள்ள (4) அபூதாவூத் (5) நஸயீ (6) இப்னுமாஜா ஆகிய மூன்று தொகுப்பிலும் அதிகமதிகம் அமல் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களே இடம் பெற்றிருப்பதால் அவை ஸூனன் என்ற பெயரில் கூறப்பட்டு வருகின்றன. ஹதீஸ் நூலனைத்திற்கும் நாயகமாய் விளங்குகின்ற ஸஹீஹூல் புகாரீ எனும் நன்னூல் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்துப் பல பாகங்களாக வெளியிட முன்வந்த சென்னை ரஹ்மத் சாரிடபிள் ட்ரஸ்ட் எனும் நிறுவனத்தினரைப் பாராட்டுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகு இதன் மூலம் நல்ல பயன் பெறுமென நம்புகிறேன். மொழிபெயர்ப்பின் முதல் பாகமாகிய இதைப் பற்பல இடங்களில் பார்வையிட்டுப் பல திருத்தங்களைச் செய்துள்ளேன். ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பை வாசித்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போல் நாமும் செய்வோம் என்ற முடிவுக்கு வரும் வாசக நேசர்கள் கவனத்திற்கு. ஒரு செயலை நபி (ஸல்) அவர்கள் நிரந்தரமாகச் செய்யாமல் சில சமயம் அவசியத்தை முன்னிட்டோ நிர்பந்த நிலையினாலோ அல்லது சில நேரம் அவ்வாறு செய்வது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டது அனுமதிக்கப்பட்டது ஏற்றமுள்ள ஒன்றன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவோ செய்திருக்கலாம். நின்ற நிலையில் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள் என 201ஆவது பக்கத்தில் காணப்படும்அறவிப்பும் 237 238ஆவது பக்கங்களில் மூஸா (அலை) அய்யூப் (அலை) போன்ற நபிமார்கள் தனிமையில் நிர்வாணமாகக் குளித்ததாக வந்த அறிவிப்புகளும் இவ்வகையில் செய்திருக்கலாம்.. சில சமயம் நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸ் மற்றொன்றுக்கு முரண்பட்ட முறையில் காணப்படும்.அவ்விரண்டில் ஒன்று காலத்தால் முந்தியது. பிரிதொன்று பிந்தியது. பின்னுள்ளது முன்னுள்ளதை முற்றிலும் மாற்றிவிட்டதாகக் கருதவேண்டும். 244 245 246ஆவது பக்கங்களில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் அதாவது ஆண் பெண் உறுப்புகள் சந்தித்து விட்டால் இந்திரியம் வெளியாகாமருப்பினும் குளிப்பு கடமைதானா? இல்லையா? என்பது மேற்கூறப்பட்ட வகையைச் சாரும். புகாரீ இமாம் (ரஹ்) அவர்கள் குளிப்பது என்பதுதான் இறுதிக் கட்டளையாகும். ஆகவே குளிப்பது சிறந்தது எனக் கூறுகிறார்கள். குளிப்பது சிறந்தது என்று கூறியதால் குளிக்காமலும் இருப்பது ஆகும் எனக் கருதுதல் கூடாது. காரணம் அமீருல் முஃமினீன் உமர் பாக் (ர) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் கருத்து வேற்றுமையுள்ள இந்த மஸ்அலாவை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கருதி நாயகத் தோழர்கள் பலர் உள்ளடங்கிய ஒரு கூட்டத்தைக் கூட்டி விவாதம் நடத்தினார்கள.முடிவில் அன்னை ஆயி` (ர) அவர்களின் தீர்ப்புக்கேற்ப குளிக்க வேண்டும் அதுவே கடமையான ஒன்றாகும் என்பது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆகவே குளிப்பது சிறந்தது என்று இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறியது பேணுதல் அடிப்படையில் கடமையான ஒன்றாகும் எனப் பொருள் விரியும். ஹதீஸ்களின் மொழி பெயர்ப்புகளை மட்டும் வாசித்தறியும் இலாமிய அன்பர்கள் வழி தவற இடமிருப்பதால் ஆங்காங்கே அவசியமான இடங்களில் அடிக்குறிப்புகளுடன் அடுத்தடுத்த தொகுதிகளை வெளியிடுவதே சாலச் சிறந்தது என்பதை அன்புடன் கூறுகிறேன். அப்போதுதான் முழுமையான பயனைத் தமிழ் உலகிற்குத் தந்ததாக அமையும் என்பது இச்சிறியோனின் ஆலோசனையாகும். சென்னை ரஹ்மத் சாரிடபிள் ட்ரஸ்ட் நிறுவனத்தாரின் நன்னோக்கங்கள் அனைத்தையும் நாயன் நிறைவுபெறச் செய்து அவர்கள் தம் திருப்பணியனைத்தையும் அவனின் திருமுகத்திற்காகச் செய்துவரும் பணிகளாக ஏற்றருள் புரிவானாக! அற்புதமான சக்தியைப் பெற்றுச் சுபகுணங்களின் இருப்பிடமாய் அமைந்து பதினாறு அண்டுகால ஓயாதுழைப்பால் ஒப்பற்ற புகாரீ `ரீஃப் எனும் நன்நூலை உருவாக்கித் தந்த உத்தமர் இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயீல் (ரஹ்) அவர்களின் குற்றங் குறைகளை இறைவன் மன்னித்து அவர்களின் மண்ணறையை ஜோதியால் நிரப்பி உயர்ந்த சுவனபதியில் அன்னாரின் இருப்பிடத்தை ஆக்கித் தந்தருள்வானாக! அன்புடன் >பிஎஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி
sdf
செய்திகள்
Copyright © reserved by: RAHMATH TRUST | Email : buhari@rahmath.net | Disclaimer Click here to Download Tamil Fonts RealOne Player