Please Wait.....

Chennai Rahmath

தமிழ் பதிப்பு English Version
Space

எழுத்து அளவு

ஹதீஸ் புகாரி (ஒலி)

Space 
FONTS PROBLEM.? DOWNLOAD
AUDIO PROBLEM.? DOWNLOAD
நீங்கள் 82430 - வது பார்வையாளர்
Webmail Legal Notification முதல் பக்கம் எங்களைப்பற்றி
ரஹ்மத் பதிப்பகம்
Space
Rahmath Book Buy Online
Space
வீடியோ
Space
மேலும்...
Space
ஒலி
Space

மேலும்...

Space
புகைப்படங்கள்
Space
இதர இனைப்புகள்
Space

Rahmath online bookstore
www.rahmathbooks.com

Space

 

ஹதீஸ் புகாரி > வாழ்த்துரை

       

இணையத்தில் இஸ்லாம்
வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா

மாபெருங் கொடை
ஈடீசுஃ,டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்



இணையத்தில் இணைகிறோம் மொழி பெயர்ப்பாளர் குழு ரஹ்மத் பப்ளிகே~ன்ஸ்

நன்னெறிப் பார்வைக்கு ஒரு மைல்கல்முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான் எம். ஏ.

இணையத்தில் இஸ்லாம்வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா

முன் எப்போதையயும்விட ஒரு இக்கட்டான காலகட்டத்தை இஸ்லாமும் முஸ்லிம்களும் கடந்து கொண்டிருக்கின்றனர் என்றே கூறவேண்டும். சுருங்கக் கூறினால் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரம் திட்டமிட்ட முறையில் செய்தி ஊடகங்கள் வழியே ஆதிக்கவாதிகளால் வலுவாகப் பரப்பப்பட்டு வருகிறது எனினும் அறிவுலகம் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை கருத்து நுட்பங்களை உள்ளது உள்ளவாறே அறிவதிலும் புரிந்துணர்வதிலும் பேரார்வம் காட்ட முனைந்துள்ளது. உலகப் பேரறிர்களால் ஒருமுகமாகக் கூறப்படும் கணிப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மிகச் சரியான வாழ்வியல் மார்க்கம் இஸ்லாம் என்பதேயாகும்.

இந்நிலையில் இஸ்லாத்தைப் பற்றிய சரியான தோற்றத்தை ஆதாரப்ப+ர்வமான செய்திகளை உள்ளது உள்ளவாறே உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய இன்றியமையாக் கடப்பாடு முஸ்லிம் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ளது. இக்கடமையை மிகச் சரியான முறையில் தெளிவாக உணர்ந்து சமுதாயம் போற்றத்தக்க வகையில் அரும்பணியாக சென்னை ரஹ்மத் அறக்கட்டளையினர் திறம்பட நிறைவேற்றி வருகின்றனர். அதற்கு அடித்தளமாக இமாம் புகாரியின் ஸஹீஹ_ல் புகாரிங ஹதீஸ: தமிழ் வடிவ வெளியீடுகள் அமைந்துள்ளன.

இறைவாக்குப் பெட்டகமான திருக்குர்ஆன் திருமறையும் அதற்கு விளக்கமாக அமைந்த பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியான வாழ்வையும் வாக்கையும் உள்ளடக்கிய அல்ஹதீஸ_ம் இஸ:லாத்தின் இரு கண்களாகும். அதிகாரப்ப+ர்வமான ஹதீஸ் என இஸ்லாமிய மார்க்க hன மேதைகளால் ஒருமுகமாகப் பாராட்டப்படுவது இமாம் புகாரியின் ஸஹீஹ_ல் புகாரி. தௌ;ளு தமிழில் வெளிவந்து அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் நுட்பமாக உணர்த்தி இஸ்லாத்தின் உட்கிடக்கையை வெளிப்படுத்துவதில் தன்னிகரற்று விளங்குகிறதெனலாம். இஸ்லாமிய நூல் வெளியீட்டில் குறிப்பாக ஹதீஸ் வெளியீட்டில் இதனையொரு சாதனை என்றே குறிப்பிடவேண்டும். இச்சாதனைக்கு மாபெரும் உந்து சக்தியாயமைந்திருப்பது ரஹ:மத் அறக்கட்டளையும் அதன் முதுகெலும்பாகத் திகழும் அதன் நிறுவனர்கள் அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா அவர்களும் அவர்தம் இளவல் எம்.ஏ. தமீம் அவர்களுமாவர். இச்சகோதரர்களின் இஸ்லாமியத் தமிழ்ப் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இச்சகோதரர்களின் ஸஹீஹ_ல் புகாரி தமிழ் வெளியீட்டிற்கு தொடக்கத்தில் உறுதுணையாயமைந்த மௌலவி அப்ளலுல் உலமா அஹ்மத் பாகவி அவர்களையும் இன்றையப் பதிப்பாசிரியராக அரும்பணியாற்றி வரும் அப்ளலுல் உலமா மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி முதலான மார்க்க hனச் செல்வர்களும் ஹதீஸ் மூலம் இஸ்லாத்தை தமிழறிந்தோரிடையே முறையாக முழுமையாகக் கொண்டு செல்வதில் முழு வெற்றி பெற்று இறையருளுக்குத் தங்களை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டும்.

என்னதான் சத்தான பொருளென்றாலும் அதனை வழங்கும் முறையைப் பொருத்தே அதன் வெற்றி அமையவியலும். காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப வழங்கும் முறையும் அமைய வேண்டும். அதிலும்கூட தாங்கள் சிறிதும் சளைத்தவர்களில்லை என்பதை மீண்டுமொருமுறை நிபித்துள்ளார்கள் சென்னை ரஹ்மத் அறக்கட்டளையினர். கணிணி யுகத்திற்கேற்ப இணையவழி எதையும் கொண்டு செல்லும் போக்கு முனைப்புடன் வீச்சாக வளர்ந்து வலுவடைந்து வருகிறது. அதற்கேற்ப ஆங்கில மொழிக்கு அடுத்து இணையமொழி அரங்கேறிய மொழி தமிழ். இன்றும் ஆங்கில மொழிக்கு அடுத்த நிலையில் ஏராளமான வி~யங்கள் இணையம் வழியே உலகளாவிய முறையில் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்கப+ர்வமாக உலகெங்கும் வாழும் தமிழறிந்த மக்களிடையே நபிகளாரின் பொன்மொழிகளை அவர்தம் வாழ்க்கை நிகழ்வு வழியே கொண்டு சென்று புதுவரலாறு படைத்த பெருமை இறையருளால் இவ்விரு சகோதரர்கட்கும் உண்டு.

இன்றைய உலக மக்கள் அனைவரும் இல்லா நிலையில் கணினி இணையம் மூலம் ஒருசேர இணைக்கப்பட்டுள்ளார்கள். சுருங்கச் சொன்னால் உலகம் உள்ளங்கையுள் சுழன்று கொண்டுள்ளதெனலாம். நமக்குத் தேவைப்படும் எத்தகைய செய்தியையும் நொடிப்பொழுதில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே இணையத் தளம்வழி பெறமுடியும்.

இவ்வாறு உலகளாவிய முறையில் எத்துறைச் செய்தியையும் எளிதாகக் கொண்டுசெல்லும் வாய்ப்பளிக்கும் இணையம் வழி இஸ்லாத்தைப் பரப்ப அண்ணலாரின் வாழ்வையும் வாக்கையும் கொண்டு செல்ல வாய்ப்பேற்பட்டுள்ளது. அந்நிலையில் மிகச்சரியான அதிகாரப்ப+ர்வமான ஹதீஸை மிகச் செம்மையாக மொழிபெயர்த்து எளியஇனிய நடையில் எவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இணையம் வழி தந்திருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும். படிப்போர் எளிதாகப் பொருள் காணும் வகையில் துணைத்தலைப்பிட்டுத் தந்துள்ள பாங்கு பாராட்டத்தக்கதாகும். ஒவ்வொரு தொகுதியிலும் துணைத்தலைப்புகளின் அடிப்படையில் சொற்பொருள் அட்டவணை தந்திருப்பது தேவைப்படும் செய்திகளை வாசகர்கள் எளிதாக விரைந்து பெற பேருதவியாயமையும் என்பது திண்ணம்.

ஏழு தொகுதிகளில் 7563 பொன்மொழிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் வழியே இஸ்லாமிய மார்க்கத்தைத் தெளிவுபடுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியும் பொருளடக்கம் பொருள் விளக்கம் இறுதியில் அட்டவணை என அமைந்துள்ள பாங்கு வாசகர்கள் எளிதாக நூலைக் கையாள வாய்ப்பாயமைகிறதெனலாம்.

ஏழாவது இறுதித் தொகுதியின் இறுதியில் 193 பக்கங்களில் ஏழு தொகுதிகளின் உள்ளடக்கமான செய்திகளை தொகுதிவாரி தலைப்புகளாகத் தந்துள்ளது. வாசகர் விரும்பும் செய்தியை பக்கத்தை எளிதாகப் புரட்டவும் தேவைப்படும் செய்தியை விரைந்து பெறவும் பெருவாய்ப்பளிக்கிறதெனலாம். அஃதன்னியில் ஒவ்வொரு தொகுதியும் தக்கவர்களின் ஆய்வுரைகளோடு வெளிப்படுத்தப்பட்டிருப்பது நூலின் சிறப்பை மேலும் உயர்த்துவதாயுள்ளது.

சுருங்கக்கூறுமிடத்து இன்றையக் காலச்சூழலில் மனிதகுலத்தின் இன்றியமையாத் தேவையொன்றை இனிது நிறைவேற்றிய சென்னை ரஹ்மத் அறக்கட்டளையினர் வல்ல அல்லாஹ்வின் பேரருளுக்கு மட்டுமல்ல நம் அனைவரின் உள்ளார்ந்த பாராட்டுக்கும் துஆவுக்கும் உரியவர்களாவர் என்பது திண்ணம்.

வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா

மாபெருங் கொடை டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்

இது கணினி யுகம். இதில் மதங்களுக்கு வேலை இல்லை. அவை காலாவதியாகிவிட்டன என்று சிலர் கூறுகின்றனர். சில மதங்களைப் பொறுத்தவரை இந்த மதிப்பீடு சரியானதே. அவை அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகளையே கொள்கைகளாகவும் செயல்களாகவும் கெண்டிருக்கின்றன.

இஸ்லாம் அறிவுக்கு உயர்ந்த இடம் தருகிறது. அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் அறிவின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஒவ்வோர் அறிவியல் கண்டுபிடிப்பும் இஸ்லாத்தை மேலும் ஒளிபெறச் செய்கிறது. இஸ்லாம் மனித குலத்திற்காக வகுத்திருக்கும் வாழ்க்கைச் சட்டங்கள் இயற்கை விதிகளோடு இசைவுடையவைகளாக அமைந்திருக்கின்றன.

இஸ்லாம் ஒரு பரிப+ரணமான மார்க்கம் (குர்ஆன் 53). அதனால் இக்காலத்துக்கும் பொருந்துவதாக தேவையானதாக அது அமைந்திருக்கிறது. இறைவனும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் இக்காலத்தில் நடப்பவற்றை முன்னறிவித்துள்ளனர்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இக்காலத்தில் தோன்றியிருக்கும் பிரச்சினைகள் பலவற்றை முன்னறிவித்ததோடன்றி அவற்றிற்கான தீர்வுகளையும் கூறியிருக்கிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல்களைத் தொகுத்தளிக்கும் ஹதீஸ் நூல்களில் உயர்ந்ததாகக் கருதப்படும் ஸஹீஹ_ல் புகாரி என்ற நூலில் இதற்கான சான்றுகளைக் காணலாம்.

உலகத்துக்கு சகோதரத்துவத்தை போதிக்க வந்த மார்க்கம் இன்று பல்வேறு காரணங்களால் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. பதவி ஆசையும் உலக இன்பங்;களின் மீது மோகமும் அகந்தையும் இத்தகைய சண்டைகளுக்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இதைப் பெருமானார் முன்னறிவித்திருக்கிறார்கள்அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அ;சவில்லை. ஆனால் உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதிக்) கொள்வீர்களோ என்றுதான் நான் அ;சுகிறேன். (புகாரீ 6426)

உலகத்தில் இன்று துன்பத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் தகுதி இல்லாதவர்கள் தலைமைப் பதவிகளில் அமர்ந்திருப்பதுதான். இவ்வாறு நேரும் என்றும் இது மறுமை நாளின் அறிகுறி என்றும் பெருமானார் எச்சரித்திருக்கிறார்கள்

(ஆட்சியதிகாரம் நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள். (புகாரீ 6496)

இஸ்லாமிய சமுதாயம் இன்று நாடு மொழி இனம் மத்ஹபு என்ற பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறது. இது போதாதென்று அரசியல் கட்சிகளும் புதிது புதிதாகத் தோன்றும் இயக்கங்;களும் ஜமாத்துகளும் முஸ்லிம்களிடையே பகைமையை உண்டாக்கி மோதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் ஒரு முஸ்லிம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் புகாரியில் காணப்படுகிறது.

ஒருவர் பெருமானாரிடம் வந்து குழப்பங்கள் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். பெருமானார் நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள் என்று கூறுகிறார்கள். அவர் அவர்களுக்கு ஒரு ஜமாஅத்தோ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் என்ன செய்வது? என்று கேட்கிறார். அதற்குப் பெருமானார் அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடு என்று கூறுகிறார்கள். (புகாரீ 3606)

இக்காலத்திற்கு இதைவிடச் சிறந்த வழிகாட்டுதல் வேறென்ன இருக்க முடியும்? இஸ்லாமிய சகோதரத்துவம்தான் முக்கியம். ஜமாஅத்தோ தலைவரோ அல்ல என்ற நல்லறிவு முஸ்லிம்களுக்கு வந்துவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துவிடும்.

மார்க்க அறிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயற்கை. ஆனால் இத்தகைய வேறுபாடுகள் மக்களிடையே சச்சரவுக்குக் காரணமாகும் என்றால் அவற்றை பகிரங்;கப்படுத்தக் கூடாது என்ற அருமையான அறிவுரை ஒன்றையும் (புகாரீ 3707) பெருமானார் வழங்கியிருக்கிறார்கள். அற்ப வி~யங்களிலெல்லாம் சச்சரவிட்டு சமுதாயத்தின் ஒற்றுமைக்கு உலைவைத்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை இது.

நாகரிகம் என்ற பெயரில் இன்று அலங்கோலங்கள் அரங்;கேறிக்கொண்டிருக்கின்றன. சிறிது காலத்திற்கு முன் பெண்கள் கூந்தலை வெட்டி ஆண்களைப் போல் உடை அணியத் தொடங்கினார்கள். இப்போது ஆண்கள் கூந்தல் வளர்த்துக் கொண்டை போடுகிறார்கள். (ப+ வைக்க வேண்டியதுதான் பாக்கி.) காதில் கடுக்கண் அணிகிறார்கள். ஆக மொத்தம் தோற்றத்தில் பெண் ஆணாக விரும்பி ஆண் வேடம் தரிக்கிறாள். ஆண் பெண்ணாக விரும்பிப் பெண் வேடம் தரிக்கிறான்.

பெருமானார் இவ்வாறு பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களையும் அன்றே சபித்திருக்கிறார்கள். அத்தகையவர்களை வீடுகளிருந்து வெளியேற்றுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள் (புகாரீ 6834). இன்று அறிவியலார் க்ளோனிங்; (ஊடிடடிNiபே) முறையில் விலங்;குகளை உண்டாக்கத் தொடங்கியுள்ளனர். இம்முறையில் மனிதரையும் உண்டாக்க முடியும் என்று கூறுகின்றனர். இதனால் மனிதன் படைக்கத் தொடங்கிவிட்டான் அவன் இறைவன் ஆகிவிட்டான் என்று சிலர் பிதற்றத் தொடங்கிவிட்டனர். இதனால் மிகப்பெரிய விபரீதங்;கள் நிகழும் என்பதால் பல நாடுகள் இதை எதிர்த்துவருகின்றன.

மனிதன் உயிர்களைப் படைக்கத் தொடங்கிவிட்டான் என்று கூறுவோர் ஒன்றை மறந்துவிடுகின்றனர். இறைவன் உயிரற்றதிலிருந்து உயிருடையதைப் படைத்தான் (குர்ஆன் 228). அறிவியலாரோ பிராணிகளை உண்டாக்குகின்றனர். மனிதன் எப்போதும் இறைவனைப் போல் படைக்க முடியாது.

பெருமானாரின் வாக்கு ஒன்றில் க்ளோனிங் பற்றி முன்னறிவிப்பும் அது அக்கிரமமானது என்ற தீர்ப்பும் மனிதன் உயிரணுவை உண்டாக்குவது இருக்கட்டும் உயிரற்ற அணுவைக்கூடப் படைக்க முடியாது என்ற கருத்தும் காணப்படுகிறது.

வல்லோனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் கூறுகிறான் என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு வாற்கோதுமையையேனும் படைத்துக் காட்டட்டும். (புகாரீ 7559)இத்தகைய அரிய பல செய்திகளின் அற்புதக் கள்சியமாகத் திகழ்கிறது ஸஹீஹ_ல் புகாரீ என்ற ஹதீஸ் தொகுப்பு.

இந்நூல் மார்க்க வி~யங்களில் இறை வேதத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. ஆதாரப+ர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூல்களில் முதன்மையானதாக மதிக்கப்படுகிறது.

இந்நூலைத் தொகுப்பதற்காக இதன் ஆசிரியர் இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் காட்டிய அக்கறையும் எடுத்துக்கொண்ட சிரமமும் வியக்கத் தக்கவை. பொய்யான தகவல் எதுவும் கலந்துவிடக் கூடாது என்பதாற்காகத் தமக்குக் கிடைத்த ஒவ்வொரு தகவலையும் கடுமையான பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மனிதனுக்கு வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இதைவிடச் சிறப்பாக வழிகாட்டக் கூடிய நூல் வேறு இல்லை எனலாம்.

இத்தகைய பெருமை படைத்த ஸஹீஹ_ல் புகாரீ நூலை சென்னை ரஹ்மத் அறக்கட்டளையை நிறுவிய ஜனாப் எம்.ஏ. முஸ்தபா ஜனாப் எம்.ஏ. தமீம் சகோதரர்கள் தக்கவர்களைக் கொண்டு எளிய இனிய தமிழில் மொழிபெயர்த்து ஏழு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

இப்போது இந்நூலை உலகமெங்;கும் பெற்றுப் பயனடையும் வகையில் இணையத் தளத்தில் வழங்குகின்றனர். இது மாபெருங் கொடை. இதற்காகத் தமிழ் முஸ்ம்கள் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையினர் மேலும் இத்தகைய மார்க்கத் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவைப்படும் அனைத்தையும் அல்லாஹ் அருளாளன் அவர்களுக்கு அருள வேண்டும் என்று வேண்டுவோமாக!

அப்துல் ரகுமான்
சென்னை
15.08.2002

இணையத்தில் இணைகிறோம்
மொழிபெயர்ப்பாளர் குழு ரஹ்மத் பப்ளிகே~ன்ஸ்

தகவல் தொழில் நுட்பம் மிக வேகமாக வளர்ந்துவரும் இன்றையச் சூழ்நிலையில் நல்ல கருத்துகளும் நீதிபோதனைகளும் உலக மக்களைச் சென்றடைய எளிய வழிகள் பிறந்துள்ளன. வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு அல்லது அலுவலகத்தில் இருந்துகொண்டு இணையதளத்தின் உதவியால் திருமறையையும் நபிமொழிகளையும் எளிதாக வாசிக்கவும் கேட்கவும் முடியும். இது மனிதனுக்கு இறைவன் அருளிய அறிவாற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அறிவியல் முன்னேற்றமும் தொழில் நுட்பமும் இறைவன் உருவாக்கும் காலமாற்றங்களாகும். இந்த மாற்றங்களை ஏற்க மறுத்து ஒதுங்க நினைத்தால் காலம் நம்மை ஒதுக்கிவிடும். தீமைகள் அறிவியல் துணைகொண்டு உலகைச் சுற்றிவரும்போது தீமைகளை வெல்ல நன்மைகள் ஏன் அறிவியலைத் துணைக்கு அழைக்கக் கூடாது? ஒன்றைத் தோற்கடிக்க அதன் எல்லைக்குச் சென்று போராடினால்தானே முடியும்?

இந்த வகையில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளையினர் வெளியிட்டுள்ள ஸஹீஹ_ல் புகாரீ தமிழாக்கமும் விளக்கவுரையும் இணைய தளத்தில் இணைகின்றன. திருக்குர்ஆனுக்கு அடுத்து ஆதாரப+ர்வமான சான்று என உலக முஸ்லிம்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஒப்புவமையற்ற நபிமொழித் தொகுப்புதான் ஸஹீஹ_ல் புகாரீ. இன்றைய ர~pயக் குடியரசுகளில் ஒன்றான உஸ்பிகிஸ்தானில் உள்ள புகாரா நகரத்தில் ஹிஜ்ரி 194ஆமாண்டு (கி.பி. 810) பிறந்து ஹிஜ்ரி 256ஆமாண்டு (கி.பி.870) சமர்கந்த் (கர்கந்த் ர~pயா) நகரில் மறைந்த இமாம் அப+அப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்புகாரீ (ரஹ்) அவர்களின் 16 ஆண்டு காலக் கடின உழைப்பில் உருவானதே இந்த அரிய தொகுப்பு.

இத்தொகுப்பில் 97 அத்தியாயங்களில் 7563 நபிமொழிகள் தகுந்த அறிவிப்பாளர் சான்றுகளுடன் இடம்பெற்றுள்ளன. இறைச்செய்திகளின் (வஹீ) துவக்கத்தில் தொடங்கி இறைநம்பிக்கை தொழுகை நோன்பு ஸகாத் ஹஜ் வேளாண்மை வணிகம் திருமணம் நற்பண்புகள் சட்டம் நீதிநிர்வாகம் என்று பல்துறை தலைப்புகளில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறப்போதனைகளும் வழிகாட்டல்களும் இடம்பெற்றுள்ள இந்த அரும்பெரும் தொகுப்பானது ஓரிறைக்கோட்பாடு (தவ்ஹீத்) எனும் அத்தியாயத்தில் நிறைவடைகிறது.

அரபிமூலம் தமிழாக்கம் அடிக்குறிப்பு விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஏழு பாகங்களில் வெளிவந்துள்ள ஸஹீஹ_ல் புகாரீ நபிகளாரின் பொன்மொழிகள் இ;ப்போது அப்படியே இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இணையதளத்தின் வழிகாட்டிக் குறிப்பில் காணப்படும் முறைகளைப் பயன்படுத்தித் தேவையான ஹதீஸை இணையதள நேயர்கள் பார்க்கலாம்; வாசிக்கலாம்; நகல் எடுக்கலாம்.

அரபிமூலம் ஆதாரப+ர்வமான பதிப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. மூலத்தின் ஒரு சொல்கூட விடுபட்டுவிடாமலும் மூலத்தின் கருத்து சிதைந்துவிடாமலும் முழு எச்சரிக்கை உணர்வோடு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாசித்தவுடன் விளங்கும் வண்ணம் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழாக்கமும் சரி; அடிக்குறிப்புகளும் சரி; ஆதாரப+ர்வமான விரிவுரைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள:ளன.

மொழிபெயர்ப்பாளர் குழுவில் இடம்பெற்றுள்ள மார்க்க அறிர்கள் (ஆலிம்கள்) முறையாக மார்க்கம் கற்றவர்கள்; மார்க்கக் கல்விக் கூடங்களில் பல்லாண:டு காலம் கல்வி கற்பித்தவர்கள். இவர்கள் செய்த மொழிபெயர்ப்பை பிரபல மார்க்க அறிர்கள் தமிழறிர்கள் சட்ட வல்லுநர்கள் ஆகியோரின் ஆய்வுக்காக அனுப்பிவைத்து அவர்கள் தெரிவித்த தேவையான திருத்தங்களை மனமுவந்து ஏற்று அவற்றையும் இடம்பெறச் செய்துள்ளோம். அறிர்களின் அணிந்துரைகளும் இடம்பெறுகின்றன.

இறையருளால் 1994ஆமாண்டு ஸஹீஹ_ல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் வெளியானது. 2001ஆமாண்டு நிறைவாக ஏழாவது பாகம் வெளியாயிற்று. ஏழாண்டு கால இடைவெளியில் ஏழு பாகங்களும் வெளிவந்து தமிழ்கூறும் நல்லுலகின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. முதல் பாகம் ஆறாவது பதிப்பும் இரண்டாவது பாகம் மூன்றாவது பதிப்பும் மூன்று மற்றும் ஐந்தாவது பாகங்கள் இரண்டாவது பதிப்பும் இதுவரை வெளிவந்து சுமார் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

இன்~h அல்லாஹ் ஸஹீஹ_ல் புகாரீயைத் தொடர்ந்து ஸஹீஹ் முஸ்லிமும் இதர நான்கு நபிமொழித் தொகுப்புகளும் வெளிவர உள்ளன. அத்துடன் திருக்குர்ஆன் விரிவுரைகளில் முதல் தரமானதும் ஆதாரப+ர்வமானதும் பழம்பெரும் விரிவுரையுமான தஃப்சீர் இப்னுகஸீர் தமிழாக்கமும் வெளியிட உள்ளோம்.

இணையத்தில் ஸஹீஹ_ல் புகாரீயை வாசிக்கும் நேயர்கள் தங்களுடைய கருத்துகளையும் யோசனைகளையும் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அடுத்தடுத்த தொகுப்புகள் சீரும் சிறப்போடும் வெளிவர இறையிடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாத்தின் அறப்போதனைகள் நபிகளாரின் நற்சிந்தனைகள் உலகெங்கும் பரவிட வேண்டும் என்பதே எமது நோக்கம.; இந்த நன்னோக்கம் வெற்றியடைய இறைவன் அருள்புரிவானாக!


மொழிபெயர்ப்பாளர் குழு
ரஹ்மத் பப்ளிகே~ன்ஸ்
சென்னை 600 004.
26.07.2002

நன்னெறிப் பார்வைக்கு ஒரு மைல்கல்

முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான் எம். ஏ.
கணிப்பொறி இயக்க மேலாளர்
துபாய் இஸ்லாமிய வங்கி
துபாய்

;மனித வாழ்வின் மிகப் பெரும் மாற்றங்களுக்கு அறிவியல் ரீதியான நவீன கண்டுபிடிப்புகளே வெளிப்படையான காரணங்களாக அமைந்திருக்கின்றன அவைகள் அறநெறிகளுக்கு உட்பட்ட நல்ல வாழ்வியலில் உடன்பட்டதாகவும் முரண்பட்டதாகவும் வௌ;வேறு திசைகளில் பயணம் செய்கின்றன ஆயினும் பயனுள்ள ஆக்கப்ப+ர்வமான அங்கங்களை மட்டும் அணுகுவதே அறிவுப்ப+ர்வமானதாக இருக்கமுடியும்.

இந்நிலையில் அண்மைக்காலமாக உலகம் முழுவதும் பரந்து விரிந்து வியாபித்திருக்கும் நுட்பம் மிகுந்த கண்டுபிடிப்புதான் இன்டெர்நெட் எனலாம் இதன் மூலமாக உலகத்தின் எந்த பகுதியையும் யாரையும் மிக எளிதில் நினைத்த மாத்திரத்தில் சென்றடைய முடிகிறது

வர்த்தகம் பொருளாதாரம் அரசியல் சமூகவியல் கல்வி ஆன்மீகம் என்ற எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அந்தத் துறையின் வடிவங்களையும் ஒரு சேரத் தரும் இந்த நவீன ஊடகத்தில் பற்பல சாதனைகளைப் பரைசாற்றி வருகிறது இந்த நூற்றாண்டின் மனித சமுதாயம்.

வல்ல இறைவன் அருளித் தந்திருக்கிற இந்த அற்புத அமைப்பினை மிகச் சிறந்த நன்னோக்கத்திற்குப் பயன்படும் காரணியாக சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தார் உருவாக்கி அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகள் நிறைந்த ஸஹீஹ_ல் புகாரி தமிழாக்கம் முழுவதையும் வெளியிடுகிறார்கள் இன்டெர்நெட் உலகின் நன்னெறிப் பார்வைக்கு இது ஒரு மைல்கள் எனலாம்.

இன்று உலக அமைதிக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும் தீவிரவாதப் போக்குகளைக் களைந்து அமைதி நிலவும் அழகிய வாழ்வை மேற்கொள்ளும் தூய வடிவத்தைத் தரும் பாங்கும் ஒருவருக்கொருவர் சமாதான சமர்ப்பணங்களைச் சந்தோ~ நிலையில் பரிமாறி பார்புகழும் பண்பாட்டைச் சமைத்திடும் பக்குவமும் சீரிவரும் சினங்களின் சிதறல்களால் சீர்கெட்டு வரும் வாழ்வியலில் அறநெறிகளை அள்ளித் தந்து அகமகிழ வாழச் செய்யும் நேர்த்தியும் ஆணவ ஆட்டங்களும் அடங்காத அதிர்வுகளைத் தந்து அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்; வன்கொடுமை வாழ்விலிருந்து மானுட கீர்த்தியை மாறாமல் காத்திடும் நிதானமும் பெருமானரின் வாழ்வுப் பாதையில் காணக் கிடைக்கும் அற்புத அறநெறிகள். எக்கால்த்திற்கும் பொருந்தும் இவைபோன்ற வழிகாட்டுதல்கள் நிறைந்து காணப்படும் கருவ+லப் பெட்டகம்தான் ஸஹீஹ_ல் புகாரி

.ஊலகின் எந்தப் பகுதியிலும் எந்தப் பிரச்சனைக்கும் தெளிவான தீர்வுகளை எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்திலிருந்தும் பெறுவதற்கேற்ற இந்த ஹதீஸ் தொகுப்புகளைக் காலக் கண்ணாடியாக இன்டெர்நெட்டில் எழிலார்ந்த முறையில் வடிவமைத்து வழங்கிடும் அரும் முயற்சி மேற்கொண்ட என் இனிய சகோதரர்கள் முத்துப்பேட்டை எம். ஏ. முஸ்தபா எம். ஏ. தமீம் ஆகியோருக்கு நனிசிறந்த இந்நன்னோக்கில் பின்புலமாக இருந்து செயல்படும் அருட்புறத்திலிருந்து எல்லா நலன்களையும் பலன்களையும் இம்மையிலும் மறுமையிலும் வாரி வழங்குவானாக ஆமீன்.

முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான் எம். ஏ.

கணிப்பொறி இயக்க மேலாளர்
துபாய் இஸ்லாமிய வங்கி
துபாய்

Space
முக்கிய தலைப்புகள்
Space
Space
செய்திகள்
Space

sdf

செய்திகள்

மேலும்...

Space
விளம்பரம்
Space
Rahmath Arakkatalai Nandri Musthafa Arakkatalai Rahmath Metric Asian Exchange

Copyright © reserved by: RAHMATH TRUST | Email : buhari@rahmath.net | Disclaimer
Click here to Download Tamil Fonts RealOne Player