Please Wait.....

Chennai Rahmath

தமிழ் பதிப்பு English Version
Space

எழுத்து அளவு

ஹதீஸ் புகாரி (ஒலி)

Space 
FONTS PROBLEM.? DOWNLOAD
AUDIO PROBLEM.? DOWNLOAD
நீங்கள் 82419 - வது பார்வையாளர்
Webmail Legal Notification முதல் பக்கம் எங்களைப்பற்றி
ரஹ்மத் பதிப்பகம்
Space
Rahmath Book Buy Online
Space
வீடியோ
Space
மேலும்...
Space
ஒலி
Space

மேலும்...

Space
புகைப்படங்கள்
Space
இதர இனைப்புகள்
Space

Rahmath online bookstore
www.rahmathbooks.com

Space

 

ஹதீஸ் புகாரி > அறிமுகம்

       

இஸ்லாமிய நெறிமுறையில் அடிப்படை ஆதாரங்களாக அமைந்திருப்பவை அல்லாஹ்வின் அருள் மறையும் அண்ணல் நபிகளாரின் திருமறையும் ஆகும்.

திருக்குர்ஆன் உரைகள் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் வசனங்களே ஆகும்.
இறைவனால் அருளப்பட்ட அந்த உரைகளை அண்ணல் நபிகளார் (ஸல்) நாவினால் உரைத்தார்கள்.

திருக்குர்ஆன் மனித வாழ்வு செம்மையுறுவதற்கான எல்லா அடிப்படைகளையும் வகுத்துரைக்கிறது. அந்த அடிப்படையில் மனிதன் செயல்படுவதற்குரிய வழிமுறைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன் வாக்கின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் எடுததுரைத்து முறைப்படுத்தி இருக்கிறார்கள்.

இதுவே சுன்னா என அறியப்படுகிறது.அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்பக்கூடியவர்களுக்கு அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடம் இருக்கிறது என திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அண்ணலாரின் வாழ்வையே முன்மாதிரியாகக் கொண்டு செயல்படத் தலைப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய சொர் செயல் ஒப்புதல் நடை உடை பாவனை அனைத்தையும் நேரிலே கேட்கவும் காணவும் வாய்ப்பு பெற்ற நல்லறத் தோழர்கள் பேறு பெற்றவர்களாக விளங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்னாலே அவர்களின் வழிமுறைகளை அறிந்த ஸஹாபாக்கள் தம் காலத்தில் வாழ்ந்த ஆனால் அண்ணலாரைக் காணாத தோழர்களுக்கும் அடுத்து வரும் தலைமுறையினருக்கும் பயன்படத் தக்க விதத்தில் அண்ணலாரின் உரைகளைத் தொகுக்க முற்பட்டார்கள் தொகுத்ததை விரித்துரைத்து வந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த நாவுரைகள் முஸ்லிம்களுடைய வாழ்வில் ஒளியூட்டும் அருளுரைகளாகத் திகழ்ந்தன.
இவையே ஹதீஸ் என அறியப்படலாயின.

ஹதஸ் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ். ஹதீஸ் என்றால் உரை உரையாடல் நிகழ்ச்சி புதிய செய்தி எனப் பொருள்படும்.

சிறந்த ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதம்தான் என நபிகளார் கூறியதற்கு இணங்க சில சந்தப்பங்களில் திருக்குர்ஆனைக்கூட அதுவும் புதிய செய்தியைத் தந்தால் ஹதீஸ் என சொல்லப்பட்டாலும் இலாமிய மரபில் பெருமானாரின் திருவுரைகளே இன்று ஹதீஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற வசனங்கள் கோவுரை (அருள் வேதம்) என அறியப்பட்ட அதே நேரத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கோவுரைக்கு விளக்கமாக தாம் உரைத்த நாவுரைகளே ஹதீஸ் என அறியப்படலாயிற்று.

இஸ்லாமிய நெறிமுறையில் இறைவனுடைய அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்னுரைத் தொகுப்புகளாகிய ஹதீஸ்கள் மதிக்கப்படுகின்றன.

திருக்குர்ஆனை முழுமையாக உணர்ந்து செயல்பட்ட ஹதீஸ் அறிவும் இன்றியமையாததாகும்.

இறைவனுடைய திருவேதமும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாய்மொழியாக வெளிப்பட்டதானாலும் அதன் முழுப் பொருளை நபிகளார் (ஸல்) அவர்களின் உரைகளும் வாழ்க்கை முறைகளுமே தெள்ளத் தெளிய விளக்குவனவாக அமைந்திருக்கின்றன.

எனவே திருக்குர்ஆனின் முழுப் பொருள் அறிய ஹதீஸ் னம் அவசியம் என்ற பட்டறிவு இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் நல்லறத் தோழர்களான ஸஹாபாக்கள் தனித்தனியே கேட்டறிந்து நினைவில் வைத்திருந்த நபி உரைகள் நாளடைவில் ஒருவர் மற்றவருடன் பரிமாறி பரந்த அளவில் அறிந்து செயல்படத் துணை செய்வதாக மனித வாழ்வு முழுமையையும் பொதிந்த விளக்கமான நெறியாக உருப்பெற்றது.

இஸ்லாமிய வாழ்க்கை வழி என சொல்லப்படும் எல்லாத் துறைகளையும் தழுவியதாக கடமைகளை வகுத்துரைப்பதாக சட்டங்களை விரித்துச் சொல்வதாக தத்துவங்களை சுட்டிக் காட்டுவதாக ஹதீஸ் பேரிலக்கியம் தோன்றியது.

ஒரு முஸ்லிம் இம்மையிலும் மறுமையிலும்டேற்றம் பெற வாழ்க்கையில் விரும்பி கொள்ள வேண்டியவையும் வெறுத்துத் தள்ள வேண்டியவையும் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலேயே சட்டமாக (`ரீஆவாக) வடிவெடுத்தது.

1. பர்ளு அல்லது வாஜிப் கட்டாயக் கடமை. இதைச் செய்யாவிட்டால் தண்டனை உண்டு.

2. மன்துப் அல்லது முஸ்தஹப் இந்தச் செயலுக்கு சன்மானம் உண்டு. இதைச் செய்யாவிட்டால் தண்டனை இல்லை.

3. ஜாயிஸ் அல்லது முபாஹ் இந்தச் செயல் அனுமதிக்கப்பட்டது. எனினும் சட்ட சம்மதம் பெற்றதாக ஆவதில்லை.

4. மக்ஹ் `ரீஆவின்படி வெறுக்கப்பட்டது அங்கீகரிக்கப்படாதது. எனினும் இந்தச் செயலுக்கு தண்டனை கிடையாது.

5. ஹராம் திட்டவட்டமாக தடுக்கப்பட்டது சட்டரீதியாக தண்டனைக்குரியது.

இந்த விவரங்களெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இருந்துதான் பெறமுடியும் எனவே அவர்களின் எல்லா நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் துல்லியமாக சேகரிக்கப்பட்டு தீர்க்கமாகப் பதியப்பட்டன. இவையே இஸ்லாமிய `ரீஅத்திற்கு சட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தன. என்றாலும் இறைவனுடைய அரு உரையான திருக்குர்ஆனின் வசனங்கள் இவை என்றும் நபி (ஸல்) அவர்களின் நாவுரை இவை என்றும் பிரித்து அறிந்து பின்பற்றுவதில் பெரிதும் எச்சரிக்கை பேணப்பட்டது.

நல்லறத் தோழர்களான ஸஹாபாக்கள் காலத்திற்கும் பின்னர் நபி (ஸல்) அவர்களின் உரைகளைத் தொகுத்தவர்கள் குறிப்பிட்ட உரையை அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் அவர் சொல்லக் கேட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் உரையுடன் அவ்வுரையை எடுத்துரைத்த மக்களின் பெயர்களையும் தொகுத்துக் கூறி அதன் உள்ளண்மையை நிலைநாட்டினார்கள்.

எனவே ஹதீஸ் இரு பகுதிகளாக அமைந்தது. ஒன்று மத்ன் எனப்படும் மூலம் அடுத்து அதை எடுத்துரைத்தவர்களின் பட்டியலான இஸ்னாத்இவ்வாறாக நபி (ஸல்) அவர்களின் உரையின் உண்மையை நிலைநாட்ட அவர்களின் வாய்மொழியாக அதைக் கேட்டவர் அவர்களிடமிருந்து அதைக் கேட்டவர் என ஹதீஸ்களை எடுத்துரைத்தவர்கள் வரலாற்றில் இடம்பெறத் தக்கவர்கள் ஆனார்கள்.

இப்படி எடுத்துரைத்தவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க சீலர்களாகவும் எந்தக் காலத்திலும் பொய் மொழியாதவர்களாகவும் மிகைப்படுத்திப் பேசாதவர்களாகவும் இருந்தார்களா? என்பது பற்றிய ஆய்வே நடந்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் உரையில் குறைதல் ஏற்படாமல் கருத்து வேறுபாட்டுக்கு இடம் தராமல் அவர்கள் சொன்ன சொற்களே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் பெரும் கவனம் செலுத்தப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் உரை ஒன்றையாவது இவ்வாறு எடுத்துரைத்தவர்கள் வரலாற்றில் இடம்பெறத் தக்க பெருமைக்குரியவர்களாக ஆனார்கள். இவ்வாறு ஹதீஸ்களை எடுத்துரைத்த பெரியவர்களின் பட்டியல் ஒரு லட்சத்திற்கும் மேல் பெருகியது.

இந்தப் பெரியவர்களின் வரலாற்றை ஆராய முற்பட்ட போது இதுவரை வரலாற்றுத் துறையில் ஏற்படாத ஒரு புதிய பிரிவு தோன்றியது. இதை அஸ்மாஉர்ரிஜால் எனக் குறிப்பிடுவர்.

பெருமானார் (ஸல்) அவர்களின் நல்லறத் தோழர்கள் அவர்களைக் கண்டு உரையாடிய தாபியீன்கள் அவர்களைக் கண்டு உரையாடிய தபஅத்தாபியீன்கள் என பல தலைமுறையினரின் காலம் வரை நபி (ஸல்) அவர்களின் உரைகள் பெரும்பாலும் மக்களின் இதயங்களிலே பதியப்பட்டு அவர்களின் வாய்மொழியாக எடுத்துரைக்கப்பட்டு வந்தது.

ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவற்றையெல்லாம் நூலுருவில் முறையாக தொகுக்கக்கூடிய பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தொகுக்கப்பட்டபோது அந்த ஹதீஸின் கருப் பொருள் (மத்ன்) மற்றும் அதை எடுத்துரைத்தவர்களின் சீலம் வாய்மை நினைவாற்றல் வழி வழித் தொடர் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஹதீசின் கருப் பொருளைப் பொருத்து கீழ்க்கண்ட அடிப்படைகள் பேணப்பட்டன.

1. எந்தவொரு ஹதீஸூம் திருக்குர்ஆனுடைய மூலத்திற்கு அதன் போதனைகளுக்கு முரண்பட்டதாகவும் இஸ்லாமிய அடிப்படைகளை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்

2. ஏற்கெனவே மார்க்க மேதைகளால் ஆதாரப் பூர்வமானதாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பவைகளுக்கு முரண்படாமல் இருக்கவேண்டும்.

3. குறிப்பாக ஒரு குலத்தினர் அல்லது ஒரு வட்டாரத்தினரின் பெருமைகளை பெரிதுபடுத்திப் பேசுபவை ஒதுக்கப்பட வேண்டும்.

4. எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி தேதி நிமிடம் முதலிய விவரங்களும் குறிப்பிட்டுச் சொல்லும் செய்திகளை புறந்தள்ள வேண்டும்.

5. பெருமானார் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் நபித்துவத்திற்கும் மாறாகவோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தகுதிக்கு ஏற்றதல்லாத நிலை எடுத்தார்கள் என்றோ அல்லது கருத்தைக் கூறினார்கள் என்றோ குறிப்பிடும் செய்திகள் உள்ள ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டும்.

இத்தகைய கடுமையான விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி எடுத்துரைத்த வழிவாற்றில் உள்ள பெரியார்களிடன வாழ்வும் துல்லியமாக ஆராயப்பட்டது. அத்துடன் பொதுவே நல்லறத் தோழர்கள் பலர் முன்னிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டதும் பெரியவர்கள் பலரால் எடுத்துரைக்கப்பட்டதுமான ஹதீஸ்களைத் தொகுப்பதில் முன்னுரிமை தரப்பட்டது.

திருக்குர்ஆனுக்கு அடுத்த இடம் ஹதீஸூக்கு இருந்த காரணத்தால் இவ்வளவு விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடித்ததிலும் நியாயம் இருக்கவே செய்தது.

எடுத்துரைத்தவர் பட்டியலில் ஏதாவது இடைவெளி நேருமாயின் அல்லது அந்த பட்டியலிலுள்ளவர்களில் ஒழுக்க சீலத்தில் ஏதாவது குறைபாடு கருதப்பட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸ்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.

கடுமையான விதிமுறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்கள் ஸஹீஹ் ஒச்சமற்ற ஹதீஸ்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டன.

அறிவிப்பாளர் தகுதிகளில் சிறிய குறைபாடு இருந்து வேறுபல வழிகளில் அறிவிக்கப்பட்ட ஹதீஸின் கருத்தை சொல்லக்கூடியதாக இருந்தால் அது ஹஸன் என அறியப்பட்டன.

விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் ளயீஃப் பலஹீனமானவை என்று குறிப்பிடப்பட்டன.

இத்தகைய ஹதீஸ்களில் என்ன குறை இருக்கிறது என்பதும் மார்க்க மேதைகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மொழியை எடுத்துரைத்தவர் பட்டியலில் ஆரம்பத்தில் ஒருவர் அல்லது இருவர் பெயர் விடப்பட்டிருந்தாலும் அந்த ஹதீஸ் முஅல்லக் எனக் குறிப்பிடப்பட்டது.

ஒரு ஹதீஸ் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திற்கு இரண்டாவது தலைமுறையினரால் சொல்லப்பட்டிருந்தால் மக்தூஃ எனக் குறிப்பிடப்பட்டது.

அறிவிப்பாளர் தொடரில் சஹாபாக்களுக்கு அடுத்து யாரேனும் விடப்பட்டிருந்தால் அது முன்கதஃ என்று குறிப்பிடப்பட்டது.

ஒரு ஹதீஸின் ஆரம்பத்தில் பெருமானார் (ஸல்) அவர்களிடம் நேரில் கேட்ட ஸஹாபியின் பெயர் விடப்பட்டிருந்தால் அது முர்ஸல் என்று சொல்லப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் திருமொழியில் சொற்சிதைவோ அல்லது எடுத்துரைத்தவர் பெயர் பட்டியலில் இடறலோ இருக்குமானால் அது முஸஹ்ஹஃப் என்று குறிக்கப்பட்டது.

ஒரு ஹதீஸ் நம்பத் தகுந்த ஒருவரால் எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய கருப் பொருள் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸஹாபிகளால் எடுத்துரைக்கப்பட்ட ஹதீஸூக்கு முரண்பட்டதாக இரு `த் எனக் குறிக்கப்பட்டது.

கற்பனையாக புனையப்பட்ட உண்மையல்லாதவை மவ்; என ஒதுக்கப்பட்டது.

உலக வரலாற்றில் எந்தவொரு தீர்க்கதரிசியின் உரையும் இந்த அளவுக்கு நுணுகி ஆராயப்பட்டதாக எடுத்துக் காட்டு இல்லை. இவ்வளவு கவனத்தோடு தொகுக்கப்பட்ட ஆறு தொகுப்புகள் இஸ்லாமிய வரலாற்றில் நிரந்தரம் பெற்றிருக்கின்றன.

1. ஸஹீஹ் அல்புகாரீ

2. ஸஹீஹ் முஸ்லிம்

3. சுனன் இப்னுமாஜா

4. சுனன் அபூதாவூது

5. ஜாமிஉத் திர்மிதீ

6. சுனன் நஸாயீ

இவற்றில் திருக்குர்ஆனுக்கு அடுத்து ஆதாரப்பூர்வமானது என அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ஸஹீஹூல் புகாரீ ஆகும். புகாரா என்னும் ஊரில் பிறந்த இமாம் முஹம்மது பின் இஸ்மாயீல் என்ற மாமேதையால் தொகுக்கப்பட்டதுதான் ஸஹீஹூல் புகாரீ எனும் நபிமொழி தொகுப்பாகும்.

அரபி மொழியிலுள்ள இந்த அரிய தொகுப்பினை தமிழ் மொழியில் வழங்க சென்னை ரஹ்மத் ட்ரஸ்ட் அறங்காவலர்கள் முன்வந்திருக்கிறார்கள்.இந்த முயற்சி வரவேற்றுப் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் ஏறத்தாழ மூன்று இலட்சம் ஹதீஸ்களை நினைவில் பதித்திருந்தாலும் அவற்றில் தன்னுடைய ஹதீஸ் கலை பகுப்பாய்வு அளவுகோலுக்கு உட்பட்டதாகவும் அவர்களால் பதியப்படத் தக்கதாகவும் கருதப்பட்ட 7275 ஹதீஸ்களைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் 1197 ஹதீஸ்களைத் தமிழில் ஆக்கி அதன் முதல் தொகுப்பை ரஹ்மத் அறக்கட்டளையினர் இப்போது வெளியிட முன்வந்திருக்கின்றனர்.

அவர்கள் மேற்கொண்டுள்ள அறப்பணி இறைவனுடைய திருப்பொருத்தத்திற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லாசிக்கும் சமுதாயத்தின் ஒருமித்த பாராட்டுக்குட் உரியதாகும்.

இந்தத் தொகுதியைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளும் விரைவிலேயே வெளியிடப்பட வேண்டும் என ஆசிக்கிறேன்.

இறைவன் அதற்கு துணை செய்வானாக!

ரஹ்மத் அறக்கட்டளையினர் இன்னும் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை நூல்களை மொழிபெயர்த்து வழங்கும் முயற்சியிலும்பாடுபடவேண்டும் என விரும்புகிறேன்.

கருணையுள்ள அல்லாஹ் எல்லா நல்ல காரியங்களுக்கும் துணை செய்வானாக!

வஸ்ஸலாம்.
அப்துஸ்ஸமது
சென்னை 07.07.1994

 

Space
முக்கிய தலைப்புகள்
Space
Space
செய்திகள்
Space

sdf

செய்திகள்

மேலும்...

Space
விளம்பரம்
Space
Rahmath Arakkatalai Nandri Musthafa Arakkatalai Rahmath Metric Asian Exchange

Copyright © reserved by: RAHMATH TRUST | Email : buhari@rahmath.net | Disclaimer
Click here to Download Tamil Fonts RealOne Player