மேலும்...
Rahmath online bookstore www.rahmathbooks.com
நஹ்மதுஹூ வநுஸல்லி அலா ரசுலிஹில் கரீம் அன்பபுடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை தமிழில் தருகிற முதல் இணையத்தளம் இது இந்த ஹதீஸ் இயைணத்தளத்தை எங்களது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை மூலமாக உங்களுக்கு வழங்க வாய்ப்பளித்த ஏக இறைவனுக்கு அகம் புறம் பணிந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஓரு நல்ல நாகரீகமான அமைதியான வாழ்விற்கு தேவையான சிறந்த கருத்ததுக்களை நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நபிகளாரின் பொன்மொழித்தொகுப்புகளில் பிரபலமானவை ஆறு தொகுப்புகள். அவை.. 1. ஸஹீஹூல் புகாரி 2. ஸஹீஹ் முஸ்லிம் 3. திர்மிதி 4. அபூதாவூத் 5. நஸயி 6. இப்னுமாஜா இஸ்லாமிய மார்க்கத்தின் அசலான செய்திகளை எடுத்துச்சொல்லும் இம்மூல நூற்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முறையாக மொழிபெயர்த்து வழங்கவேண்டும். அப்போது தான் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்ககும் என்ற சிந்தனையின் விளைவாகத்தான் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நபிகளாரின் பொன்மொழித்தொகுப்புக்களை மொழிபெயர்க்கவும் அவற்றை பதிப்பிக்கவும் தொடர்ந்து மக்களுக்கு கிடைத்துவரும் வண்ணம் அவற்றை விநியோகிக்கவும் முயற்ச்சியில் இறங்கியது . அல்ஹம்துலில்லாஹ். இம்முயற்றிசிக்கு பெரிய வெற்றியை அல்லாஹ: வழங்கினான் மார்க்க அறிர்களும் சமுதாயப்பெரியோர்களும் அறிவுத்தாகம் மிகுந்த இளையசமுதாயமும் உலகம் ழுழுவதிலுமிருந்து இதற்கு அங்கிகரிக்கபட்ட பணி என்ற சிறப்பை தேடித்தந்தனர். இம்மூல நூற்களில் முதல் நூலான ஸஹீஹூல் புகாரியின் மொழிபெயர்ப்பு முழுமையாக 7 பாகங்களில் வெளிவந்து நபிமொழிச் சுவைர்களின் வீடுகளில் ஒரு நூல்நிலையத்தை தோற்றுவித்துவிட்டது. தற்போது ஸஹீஹ் முஸ்லிம் மெழிபெயர்ப்புப்பணி நடைபெற்றுவருகிறது. இன்றறைய கணிணி யுகத்தில் எந்தப்பணியும் இணையத்தில் தரப்படும் போதுதான் நிறைவடைகிறது. அது மட்டுமல்லாது முன்னேறிய நாடுகளில் புத்தகங்களை விட இணையத்தை பயன்படுத்துவது வழமையாகிவிட்டது. ஆப்ரிக்காவோ அமெரிக்காவோ எங்கோ ஒரு மூலையில் அமர்ந்தபடி வேண்டியது எல்லாவற்றையும்பெற்றுக்கொள் இணையம் வழிசெய்து கொடுக்கிறது. பிறசமயத்தவர் இஸ்லாமிய செய்திகளை நேரியைக படித்தறிந்து கொள்ளும் வாய்ப்பை இணையம் அதிக அளவில் ஏற்படுத்தகிறது. தேவைப்படும் விசயத்தை எளிமையாகவும் விரைவாகவும் தேடி எடுத்துக்கொள்ளும் வசதி இணையத்தில் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடமிருந்து பெற்ற செய்தி ஒரு சிறு வசனமாக இருப்பினும் அதை அடுத்துவர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் என்ற நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் உத்திரவை இயன்றவழிகளில் எல்லாம் செயல்டுத்த கடமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணமும் நபிகளாரின் பொன்மொழிகளை இணையத்தில் இன்பத்தமிழில் வழங்கவோண்டும் என்ற எண்ணத்திற்கு உரமேற்றியது. அந்த எணணத்தின் செயல்வடிவாகவே இந்த சுறாழறாஆகூழ.சூநுகூ உருவாகியுள்ளது. தமிழில் ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதில் உள்ள பல்வேறு சிரமங்களை தாண்டி பல சிறப்பம்சங்களுடன் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்தளத்தில் தற்போது ஸஹீஹூல் புகாரியின் முழு மொழிபெயர்ப்பும் அதன் அரபி மூலத்துடன் உங்களுக்கு கிடைக்கும். ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில் இந்த வசதி கிடைத்துள்ளது. இன்`அல்லாஹ் மற்றுமுள்ள தொகுப்புகள் அடுத்தடுத்த காலங்களில் தொடர்ந்து வரும். ஹதீஸ் ஹதீஸ் தொகுப்புகள் ஹதீஸ்கலை வரலாறு தொகுப்பாசரியர்கள் வரலாறு ஹதீஸ் சம்பந்தமான மற்ற தகவல்களும் இத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.இதிலுள்ள தேடல் வசதியும் மிக உபயோகமாக இருக்கம். உங்களுக்கு தேவைப்படும் வார்தையை வரைபடமாக தரப்பட்டிருக்கும் கீ போர்டில் கிளிக் செய்வதன் மூலம் அந்த வார்த்தை இடம் பெறும் அத்தனை ஹதீஸ்களையும் ஒரே இடத்தில் பெறமுடியும். ஹதீஸ் ஹதீஸ் தொகுப்புகள் ஹதீஸ்கலை வரலாறு தொகுப்பாசரியர்கள் வரலாறு ஹதீஸ் சம்பந்தமான மற்ற தகவல்களும் இத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும். இதிலுள்ள தேடல் வசதியும் மிக உபயோகமாக இருக்கம். உங்களுக்கு தேவைப்படும் வார்தையை வரைபடமாக தரப்பட்டிருக்கும் கீ போர்டில் கிளிக் செய்வதன் மூலம் அந்த வார்த்தை இடம் பெறும் அத்தனை ஹதீஸ்களையும் ஒரே இடத்தில் பெறமுடியும். ஒரு முக்கிய அம்சமாக நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் வரலாறு விரிவாக இங்கு தரப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் விரிவான வரலாற்றை தமிழில் தருகிற முதல் இணையத்தளமாகவும் இத்தளம் அமைந்திருக்கிறது. இன்`அல்லாஹ் இனி தொடர்ந்து ஹதீஸ் கலைச்சொல் அகராதி திருக்குர்ஆனின் பிரபலமான விரிவுரையான இப்னுகதீரின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவையும் இத்தளத்தில் இடம்பெறச்செய்யதிட்மிட்டுள்ளோம். இணையத்தில் இன்பத் தமிழில் நபிகளாரின் பொன்மொழிகளை வெளியிட வேண்டும் என்ற எங்களது அவா நிறைவேறுகிற இந்த நல்ல தருணத்தில் எங்களது அறக்கட்டளையின் நற்பணிகளில் எங்களுக்கு உறுதுணையாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்து ஒரு ஓட்டப்ந்தய வீரனை உற்சாகப்படுத்தவது போல இன்னும் இன்னும் நீங்கள் செய்ய வேண்டும் என இந்த மார்க்கப்பணில் எங்களை உற்சாகப்படுத்துகிற அனைத்து மார்க்க அறிர்களுக்கும் சமுதாயத்தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இத்தருணத்தில் பழைய நினைவுகளை அசைபோடுவது பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறோம். வரலாறு ஆகிவிட்ட ஸஹீஹூல் புகாரியின் ஏழு தொகுதிகளைத் தமிழ் உலகிற்கு வழங்கியபோது நாங்கள் கடந்துவந்த பாதையை ஒரு கணம் திரும்பிப்பார்க்கிறோம். அதில்தான் எத்தனை அனுபவங்கள்! படிப்பறிவைவிடப் பட்டறிவுதானே வாழ்க்கையில் கை கொடுக்கிறது! ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பாடம் அல்லவா? நம்முடன் வாழும் மனிதர்களுக்கு நம்மால் இயன்ற நன்மைகள் புரிவதில்தான் மனிதப் பிறவிக்கே அர்த்தம் உள்ளது. அதற்கு அடையாளமாக ஓர் அறக்கட்டளை நிறுவி அதன் வாயிலாகப் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என விரும்பினோம். எங்கள் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்டிருந்த எங்களுடைய அன்புத் தாயார் ரஹ்மத் அம்மா அவர்கள் பெயரில் சென்னை அறக்கட்டளை ஒன்றை (பதிவு எண் 7841991) 1991 ஆமாண்டு நவம்பர் திங்கள் 18ஆம் நாள் துவங்கினோம். நல்லுள்ளம் படைத்தவர்கள் அளித்த அரிய யோசனையின் பேரில் அல்லாஹ்வின் உதவி ஒன்றை மட்டுமே பலமாகக் கொண்டு மாசற்ற எண்ணத்தோடு இத்தூய பணியைத் தொடங்கினோம். இறுதி இறைவேதமாம் திருக்குர்ஆனுக்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் வெவந்துவிட்டன. ஆனால் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் அரபு மொழியில் பல இருந்தும் தமிழில் ஒன்றுகூட முழுமையாக மொழிபெயர்க்கப்படாமலிருந்தது வேதனை தரும் உண்மையாகும். நபிமொழித் தொகுப்புகளிலேயே முதன்மையானதும் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தை வகிப்பதுமான சூ`134ஸஹீஹூல் புகாரிசூ`134யை முதலில் தமிழில் வெளியிடுவதெனத் தீர்மானித்தோம். இறையின் பேரருளால் ஸஹீஹூல் புகாரி தமிழாக்கம் முதல் பாகம் 17.07.1994 அன்று வெளியானது. சென்னையில் மஸ்ஜித் மஃமூரில் மறைந்த தலைவர் சிராஜூல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் முதலாம் பாகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட கிரசண்ட் கல்வி நிலையங்கஜன் நிறுவனர் அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். முதல் தொகுதியில் 20 அத்தியாயங்களும் 1197 ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து 17.11.1996அன்று இரண்டாம் பாகம் வெளியானது. இதில் 20 அத்தியாயங்களும் (2140) 1121 ஹதீஸ்களும் (11982319) இடம்பெற்றுள்ளன. வெளியீட்டு விழா இல்லாமலேயே இரண்டாம் பாகம் வெளியாயிற்று. கர்சி மௌலவி அப்துர் ரவூப் பாகவி அவர்களின் பங்கு இந்தப் பாகத்திலிருந்து தொடங்கிற்று. அவரது அயராத உழைப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். மூன்றாம் பாகம் 18 அத்தியாயங்களையும் (4159) 1005 ஹதீஸ்களையும் (23203325) கொண்டதாகும். இதன் வெளியீட்டு விழா 21.11.1997 அன்று சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் மறைந்த தலைவர் ஆ.கா. அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.மு. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமீத் அப்துல் காதிர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியராக இருந்த மௌலவி அ. முஹம்மது கான் பாகவி நூலை அறிமுகம் செய்து உரையாற்ற கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மேல்வி`ரம் தொழிலதிபர்ஹா`ம் சாஹிப் அவர்கள் உள்பட பல பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். மூன்றாம் பாகத்தின் அறிமுக விழா 10.04.1998 அன்று சிங்கப்பூர் சுல்தான் பள்ஜவாசல் இணைமண்டபத்தில் தலைவர். ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடந்தது. பேராசிரியர் அ.முஹம்மது கான் பாகவி நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். விழாவில் சிங்கப்பூர் சுற்றுப்புற துணை அமைச்சர் ஹாஜி சித்தீக் சனீப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து 17.11.1998 அன்று ஸஹீஹூல் புகாரி தமிழாக்கத்தின் நான்காம் பாகம் வெளியானது. இதில் 5 அத்தியாயங்களும் (6064) 1038 ஹதீஸ்களும் (33264364) இடம்பெற்றுள்ளன. வெளியீட்டு விழா நடைபெறவில்லை. ஐந்தாம் பாகத்தின் வெளியீட்டு விழா 04.11.1999 அன்று துபை லூத்தா பள்ஜவாசலில் நடைபெற்றது. ஈமான் சங்கத் தலைவர் எஸ்.எம். ஸலாஹ_த்தீன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியை ஈமான் பொதுச் செயலாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். ஐந்தாம் பாகத்தில் 3 அத்தியாயங்களும் (6567) 885 ஹதீஸ்களும் (43655250) இடம்பெற்றுள்ளன. ஆறாம் பாகத்தில் 13 அத்தியாயங்களும் (6880) 1160 ஹதீஸ்களும் (52516411) இடம் பெற்றுள்ளன. இந்தப் பாகம் 13.09.2000 அன்று வெளியானது. வெஜயீட்டு விழா நடக்கவில்லை. அல்லாஹ்வின் பேரருளால் இப்போது நிறைவுப் பகுதியான ஏழாம் பாகம் வெளிவந்துள்ளது. இதில் 17 அத்தியாயங்களும் (8197) 1151 ஹதீஸ்களும் (64127563) இடம்பெற்றுள்ளன. இதன் வெளியீட்டு விழா 16.09.2001 அன்று முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலே`ன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இத்துடன் ஸஹீஹூல் புகாரியில் இடம்பெற்றுள்ள மொத்த 7563 ஹதீஸ்களும் நிறைவடைந்தன. எமது பெருமை மிகு வெளியீடான ஸஹீஹூல் புகாரி தமிழாக்கத்தின் ஏழு பாகங்களில் சிலவற்றுக்கு மட்டுமே வெஜயீட்டு விழா நடத்தினோம். அதுவும் தமிழ்பேசுவோர் இடையே நூலை அறிமுகம் செய்ய வேண்டும் இந்த அரிய கருவூலத்தைப் பற்றிய செய்தி அனைவரது கவனத்திற்கும் வர வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட விழாக்களாகும் இவை. இதே நோக்கத்தில்தான் இஸ்லாமியத் தமிழ் பத்திரிகைகளில் நமது வெஜயீடு தொடர்பாகத் தொடர்ந்து விளம்பரம் செய்துவருகிறோம். இதன் பலனாக இதுவரை வெளியிடப்பட்ட தமிழ் நூல்களிலேயே அதிக எண்ணிக்கையில் வாசிக்கப்படும் நூல் எமது வெஜயீடுதான் என்ற பெருமை கிடைத்துள்ளது. ஸஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் ஆறாவது பதிப்பும் இரண்டாம் பாகம் மூன்றாவது பதிப்பும் வெளிவந்துவிட்டன. மற்ற பாகங்கள் இரண்டாவது பதிப்பு வெளியிடும் நிலையில் உள்ளன. இதுவரை சுமார் 80 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இந்த நேரத்தில் இத்தூய பணியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த இருந்து கொண்டிருக்கின்ற பல நல்லிதயங்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். 1992 அக்டோபரில் பணியில் சேர்ந்து ஆரம்பத்திலிருந்தே எமது அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று எங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிவரும் மானேஜர் ஐ. ~pஹாபுத்தீன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் அஜத்திடுவானாக! இந்தச் சிறப்பான தொண்டில் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி தாம் சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடையே இதை அறிமுகப்படுத்தி அணிந்துரைகள் வழங்கி எங்களை உற்சாகப்படுத்திய மறைந்த தலைவர் சிராஜூல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களை எங்களால் மறக்க இயலாது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்படைய அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம். மொழிபெயர்ப்புப் பணியில் ஆரம்பமுதல் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்த மௌலவி கர்சி அப்துர் ரவ+ப் பாகவி அவர்களுக்கும் அவருடன் பணியாற்றிய வந்தவாசி மௌலவி ஜமீல் பா~h உமரீ அவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வேலூர் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே இந்தப் பணியில் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிவந்த மௌலவி அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் மூன்றாம் பாகம் முதல் இன்று வரை மொழிபெயர்ப்பாளர் குழுவின் தலைமை பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். முதலிரு பாகங்கள் வெளிவரும்வரை இப்பணி எமக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது. எமது அன்பு வேண்டுகோளை ஏற்று 1998ஆமாண்டு பாகியாத்துஸ் ஸாலிஹாத்திலிருந்து விடைபெற்று அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் எமது அறக்கட்டளையில் சேர்ந்த பிறகு எமது சுமை குறைந்தது. அவருக்கு எங்களது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பொதுவாக ஒரு நற்பணி சீராக நடைபெறுவதற்கு முதலில் இறைஅருள் வேண்டும். அத்துடன் பொருள் வளமும் நல்ல சிறந்த மனிதர்களின் துணையும் வேண்டும். அப்போதுதான் அதில் வெற்றி காண முடியும். இந்த வகையில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளைக்கு வல்ல நாயன் எல்லா அம்சங்களையும சாதகமாக்கிக்கொடுத்துள்ளான். அவனுக்கே எல்லாப் புகழும். அடுத்து 1997 ஆமாண்டு மூன்றாம் பாகம் முதல் மொழிபெயர்ப்புப் பணியில் சேர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றிவரும் மேட்டுப்பாளையம் மௌலவி சா. அப்துந் நாஸிர் பாகவி அவர்களுக்கு எங்கள் நன்றி. அதிகமாகப் பேசாமல் தாம் உண்டு தம் மொழிபெயர்ப்புப் பணி உண்டு எனத் தம்மை முழுமையாகப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கர்மமே கண்ணாயிருப்பவர் அவர். தமிழாக்க மேற்பார்வையாளராக இருந்து எங்கள் அறப்பணிக்கு அழகு சேர்த்துவரும் நாடறிந்த கவிர் டாக்டர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு எங்களது ஆழிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமக்குரிய பல்வேறு அலுவல்களுக்கிடையே ஹதீஸ் தமிழாக்கத்தைப் பார்வையிட்டு தமிழாக்கக் குழுவில் ஒருவராக இருந்து அரிய பல யோசனைகளை நல்கிவருகிறார் கவிக்கோ. அவருக்கு இறைவன் உடல் நலத்தையும் மன வளத்தையும் அஜத்திடுவானாக! எமது அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராகப் பணியில் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றிய கொடுவாயூர் மௌலவி எஸ்.என். ஜஅபர் ஸாதிக் பாகவி அவர்களுக்கும் சென்னை மௌலவி எம்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கும் எங்கள் நன்றி. தற்போது கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராகப் பணியாற்றும் ஹாபிழ் முஹம்மது புகாரி அவர்களுக்கும் எங்கள் நன்றி.. முதல் பாகத்திலிருந்து இந்த ஏழாம் பாகம் வரை அணிந்துரை வழங்கிய மார்க்க அறிர்களுக்கும் தமிழ் அறிர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக மௌலானா கமாலுத்தீன் பாகவி மௌலானா ஜைனுல் ஆபிதீன் பாகவி டாக்டர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் மௌலானா காரீ உபைதுல்லாஹ் சாஹிப் நீதியரசர் சி.மு. அப்துல் வஹ்ஹாப் மௌலனா கமாலுத்தீன் ஃபாஜில் பாகவி டாக்டர் சே. சாதிக் சித்தி சுமய்யா தாவூத் மௌலானா முஹம்மது இக்பால் காஸிமி ஆ.ந. ஃபாத்திமா முஸஃப்பர் மௌலானா எஸ். லியாகத் அலி மன்பஈ முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் ஆகியோருக்கும் ஆரம்ப முதல் இன்றுவரை தரமாகவும் நேர்த்தியாகவும் அச்சிட்டு வரும் இராயப்பேட்டை பிரிண்டர்ஸ் நிறுவனத்தாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அழகான முறையில் வரைபடங்கள் வரைந்து உதவிய ஆர்டிஸ்ட் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கும் எங்களது நன்றி. இந்தப் பாகத்தின் உ.ப.ட. பணியில் ஒத்துழைத்த மௌலவி எம்.எஸ். முஹம்மத் யூசுப் சித்தீக் மிஸ்பாஹி எம். மைநூருத்தீன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சென்னை ரஹ்மத் அறக்கட்டளை துவங்கப்பட்ட வேளையில் பிரபல நபிமொழித் தொகுப்பான ஸஹீஹூல் புகாரியைத் தமிழில் வெஜயிடுவதும் முத்துப்பேட்டையில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலே`ன் மேனிலைப் பள்ளி ஆரம்பிப்பதும்தான் எங்களது முதல் நோக்கமாக இருந்தன. ஆனால் ஸஹீஹூல் புகாரி தமிழாக்கம் வெளியிட்டதால் கிடைத்த அனுபவங்கள் அதனால் ஏற்பட்ட பொதுநன்மைகள் அறிர்களும் சான்றோர்களும் தெரிவித்த யோசனைகள் ஆகியவற்றையடுத்து ஆறு பிரபல நபிமொழித் தொகுப்புகளில் (ஸிஹாஹ் சித்தா) எசிய தொகுப்புகளையும் தமிழில் வெளியிட எண்ணியுள்ளோம். ஸஹீஹ் முஸ்லிம் ஜாமிஉத் திர்மிதீ சுனன் அபூதாவூத் சுனன் இப்னு மாஜா மற்றும் சுனன் நஸயீ ஆகிய அந்த ஐம்பெரும் தொகுப்புகளில் முதலாவதும் ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்த இடத்தில் மதிக்கப்படுவதுமான ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் இன்` அல்லாஹ் அடுத்து வெளிவரவிருக்கிறது. அத்துடன் திருக்குர்ஆன் விரிவிரைகளிலேயே முதல் தரமானதும் அனைவராலும் ஏற்கப்பட்டதுமான தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் வெளியிடத் தீர்மானித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். மேலும் ஸஹீஹூல் புகாரி தமிழாக்கத்தின் ஏழு பாகங்களையும் ஒலி குறுந்தகட்டிலும் (ஆடியோ சி.டி) வெளியிடும் பணி நடந்துவருகிறது. எங்கள் எண்ணம் நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக! இதைப் படிக்கும் நல்லிதயங்கள் அதற்காகப் பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். ஸஹீஹூல் புகாரியின் முதலாவது ஹதீஸ் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வெரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கின்றது. இதன் அடிப்படையில் நமது நல்லெண்ணத்தை அறிந்து நாம் எண்ணியதை அல்லாஹ் நிறைவேற்றித் தந்துள்ளான். இனியும் நாம் எண்ணியுள்ள இதர நூல்களும் வெளிவர அல்லாஹ் துணை நிற்பானாக! ஸஹீஹூல் புகாரியின் இறுதி ஹதீஸில் இடம்பெற்றுள்ள திருமறை வாசகம் கூறுகிறது நாம் மறுமைநாளில் நீதித் தராசுகளை வைப்போம் (2147). அவற்றில் மனிதர்களின் செயல்களும் சொற்களும் நிறுக்கப்படும். அவ்வாறு நிறுக்கப்படும்போது எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு நன்மைகள் ஏற்கப்பட வேண்டும். அதுவே எங்களது அவா. இத்தளத்திலுள் நிறைகளுக்கு அல்லாஹ் பொறுப்பானவன். குறைகள் இருப்பின் எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். புகாரியின் இறுதி ஹதீஸில் (7563) வந்துள்ளபடி சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறோம்). சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றோம்) என்று கூறி நிறைவு செய்கிறோம். இப்படிக்கு எம். ஏ. முஸ்தபா அறங்காவலர் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை.
RAHMATH PATHIPPAGAM RAHMATH BUILDING No.6, IInd Main Road,C.I.T. Colony, Mylapore, Chennai 600004. Tamil Nadu. Phone : 91 44 24997373 Email : buhari@rahmath.net www.rahmath.net
sdf
செய்திகள்
Copyright © reserved by: RAHMATH TRUST | Email : buhari@rahmath.net | Disclaimer Click here to Download Tamil Fonts RealOne Player